Look with Foresight ....


குறள் : 1172



தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?

மு.வ உரை :

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள்  இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

கலைஞர் உரை :

விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?

சாலமன் பாப்பையா உரை :

வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?

Kural 1172 :

Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap
Paidhal Uzhappadhu Evan?

Explanation :

The dyed eyes that (then) looked without foresight  why should they now endure sorrow  without feeling sharply (their own fault).


Deals For You....